மஞ்சள் நிற ஆடை, மிளிரும் புன்னகை – படப்பிடிப்புக்கு திரும்பிய கத்ரினா

கரோனா சூழலில் பாலிவுட் நடிகை கத்ரினா கைப் மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்பியுள்ளார்.

கரோனா சூழலால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக திரையுலக பிரபலங்கள் பலரும் மன அழுத்ததுக்கு ஆளாகியிருந்தனர். பின்னர் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு படப்பிடிப்புகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து பலரும் படப்பிடிப்புக்கு திரும்பினர். தற்போது கத்ரினா கைப் படப்பிடிப்புக்கு திரும்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், மீண்டும் எனது படக்குழுவினருடன் இணைந்து பணிபுரிவதில் மிக்க மகிழ்ச்சி. ஒவ்வொருவரையும் இத்தனை நாட்களாக பிரிந்திருந்தேன் என குறிப்பிட்டுள்ளார்.

கத்ரினா தற்போது அக்‌ஷய் குமாரின் ‘சூர்யவன்ஷி’, இசான் காடர் நடிக்கும் ‘போன் பூட்’ ஆகிய படங்களில் நடிக்கவுள்ளார்.