மழையில் டான்ஸ் ஆடிய கமலா ஹாரிஸ்!

அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ், தேர்தல் பிரசாரத்தின் போது, மழையில் டான்ஸ் ஆடிய வீடியோ சமூக வலைதளங்கில் வைரலாக பரவி வருகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தல், நவ.,3ம் தேதி நடைபெற உள்ளது. துணை அதிபர் பதவிக்கு, ஜனநாயக கட்சி சார்பில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். அவருக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு உருவாகி உள்ளது.

இந்நிலையில், புளோரிடாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது, மழை பொழிய, அதில் குடை பிடித்தபடி, கமலா நடனம் ஆடினார். இந்த வீடியோ சமூக வலைதளங்கில் வைரலாக பரவி வருகிறது.