எனது மகளை அதிமுக எம்எல்ஏ கடத்திவிட்டார் – தந்தை தீக்குளிக்க முயற்சி

கள்ளக்குறிச்சி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபு தனது மகள் சௌந்தர்யாவை கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டதாக கூறி சௌந்தர்யாவின் தந்தை சாமிநாதன் எம்எல்ஏ வீட்டின் முன்பு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.

கள்ளகுறிச்சி தனி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபு (34 ) தியாகதுருகத்தை சேர்ந்த மலையம்மன் கோவில் பூஜை செய்யும் பிராமனர் சுவாமினாதன்-மாலா தம்பதியினர் மகள் சௌந்தர்யாவை (20) பிரபு கடத்தி சென்றதாக தந்தை சாமிநாதன் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ள நிலையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபு இன்று அதிகாலை 5.40மணி அளவில் சௌந்தர்யாவை திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் திருமணம் செய்து கொண்டதையடுத்து இவர்களின் திருமணம் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வந்தது.இதை அறிந்த சவுந்தர்யா தந்தையார் சாமிநாதன் எம்எல்ஏ பிரபுவின் வீட்டிற்கு சென்று துரோகம் செய்துவிட்டாய் என்று நியாயம் கேட்டு கதறி அழுது தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார்.

இதை அறிந்த தியாகதுருகம் போலீசார் அவரை பாதுகாப்பாக மீட்டனர்.இதனால் கள்ளக்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here