புதிய அதிபருக்கு வாழ்த்து தெரிவிப்பதுதான் அமெரிக்காவின் வழக்கம் – ஒபாமா

அதிபர் தேர்தலில் தான் தோல்வியடைந்ததை ட்ரம்ப் ஒப்புக்கொள்ள வேண்டிய நேரம் இது என்று முன்னாள் அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அதிகார மாற்றம் குறித்து பேசிய அவர், “அமெரிக்காவில் இதுவரை அதிகார மாற்றங்கள் அனைத்தும் சுமுகமாகவே நடைபெற்றுள்ளது. வெள்ளை மாளிகைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நபரை அதிபர் அழைக்க வேண்டும்.மேலும், பதவியேற்பு விழாவில் பங்கேற்று நாட்டை சிறப்பாக வழிநடத்த புதிய அதிபருக்கு வாழ்த்து தெரிவிப்பதுதான் அமெரிக்காவின் வழக்கம். இதையெல்லாம் ட்ரம்ப் செய்கிறாரா இல்லையா என்று பொறுத்துதான் பார்க்க வேண்டும்” என்றார்.அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் அடுத்தாண்டு ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.