தளபதியின் 28 ஆண்டுகள் திரையுலக பயணம்!

நடிகர் விஜய் திரையில் அறிமுகமாகி இன்றுடன் 28 ஆண்டுகள் நிறைவாகியுள்ள நிலையில் அவரது ரசிகர்கள் இன்று சிறப்பு பிரார்த்தனைகளில், கொண்டாடங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

1984-ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக வெற்றி என்ற திரைப்படத்தில் நடிகர் விஜய் தோன்றினார். இந்த திரைப்படத்தை விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கினார் இதனைத் தொடர்ந்து ஹீரோவாக நாளைய தீர்ப்பு மாண்புமிகு மாணவன் செந்தூரப் பாண்டியன் உள்ளிட்ட திரைப்படங்களில் அறிமுகம் செய்யப்பட்டார் .

திரை உலகில் நடிகர் விஜய்க்கும் அஜித்துக்கும் கடுமையான போட்டி நிலவியதால் இருவரும் தற்போது வரை சினிமா களத்தில் முன்னணி நட்சத்திரமாக விளங்கி வருகிறார்கள் தற்போதுள்ள மாஸ்டர் திரைப்படம் வரை நடிகர் விஜய்க்கு பயங்கரமான வரவேற்பு கிடைத்து வருகிறது.