ஐ.பி.எல் களத்தில் இறங்கும் பிரபல நடிகர்

ஐ.பி.எல் புதிய அணியை வாங்குவதற்கு நடிகர் மோகன் லால் ஆர்வம் காட்டி வருகிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதற்காக தான் ஐ.பி.எல் 2020 தொடரின் இறுதிப்போட்டியில் சிறப்பு விருந்தினராக அவர் கலந்து கொண்டுள்ளார். மேலும் பிரபல கல்வி செயலியான பைஜூஸ் நிறுவனத்துடன் இணைந்து அவர் 9-வது அணியை வாங்க உள்ளார். அதற்கான வேலைகளையும் துபாய் சென்ற அவர் கவனித்து வருகிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.