சூப்பர் ஓவரில் ஐதராபாத்தை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி!!!

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத்துக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் கொல்கத்தா அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.

பின்னர் வெற்றி தோல்வியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் முதலில் ஐதராபாத் பேட் செய்தது. கொல்கத்தா தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் லோக்கி பெர்குசன் வீசினார். முதல் பந்தில் வார்னர் போல்டு ஆனார். அடுத்த பந்தில் 2 ரன் எடுத்த அப்துல் சமத் 3-வது பந்தில் வீழ்ந்தார். இதனால் ஐதராபாத்தின் சூப்பர் ஓவர் இன்னிங்ஸ் 2 ரன்னுடன் முடிவுக்கு வந்தது.

பின்னர் 3 ரன் இலக்கை கொல்கத்தா அணி 4-வது பந்தில் எட்டிப்பிடித்து ‘திரில்’ வெற்றியை ருசித்தது. கொல்கத்தா பவுலர் பெர்குசன் ஆட்டநாயகன் விருது பெற்றார். 9-வது லீக்கில் ஆடிய கொல்கத்தாவுக்கு இது 5-வது வெற்றியாகும். ஐதராபாத்துக்கு 6-வது தோல்வியாகும்.