உலகிலேயே அதிக எண்ணிக்கையில் தடுப்பூசிகளை வாங்கும் இந்தியா!

 உலகிலேயே இந்தியாதான் அதிகப்படியான எண்ணிக்கையில் அதாவது 1.6 பில்லியன் டோஸ் தடுப்பூசிகளை வாங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மூன்று வெவ்வேறு நிறுவனங்கள் தயாரித்த தடுப்பூசிகளில் 1.6 பில்லியன் டோஸ்களை இந்தியா வாங்கவுள்ளதாகவும், அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றியம் நான்கு வெவ்வேறு நிறுவனங்கள் தயாரித்த தடுப்பூசிகளை வாங்க உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியம் 1.58 பில்லியன் டோஸ்களையும் கரோனாவால் பெரிதும் பாதிப்படைந்த அமெரிக்கா ஒரு பில்லியன் டோஸ்களையும் வாங்கவுள்ளன.

இதுகுறித்து டியூக் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட அறிக்கையில், “உற்பத்தித் திறன் கொண்ட இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகள் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களுடன் உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தத்துடன் வெற்றிகரமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.