உத்தர பிரதேசத்தில், குழந்தை பெற்ற, 14 நாட்களில், கொரோனா தடுப்பு பணிக்கு திரும்பிய, பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியை, பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
உத்தர பிரதேசத்தின் காசியாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர், சவுமியா பாண்டே. இளம் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான இவர், மோதிநகர் துணை கலெக்டராக பணியாற்றி வந்தார். ஜூலை முதல், கொரோனா தடுப்பு பணிக்கான தனி அதிகாரியாக, காசியாபாத்தில் பணி நியமனம் செய்யப்பட்டார்.கர்ப்பிணியாக இருந்த சவுமியா, செப்டம்பரில், பிரசவத்திற்காக விடுப்பில் சென்றார். அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், பிரசவம் முடிந்து, 14 நாட்களில், கைக்குழந்தையுடன் பணிக்கு திரும்பினார். இதனால், உடன் பணியாற்றும் அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.