ஆன் லைன் ரெயில் டிக்கெட் முன்பதிவில் இந்தி திணிப்பு இல்லை – தெற்கு ரெயில்வே

ஆன் லைன் ரெயில் டிக்கெட் முன்பதிவில் இந்தி திணிப்பு இல்லை என்று தெற்கு ரெயில்வே விளக்கம் அளித்துள்ளது.

ரெயில் முன்பதிவு செய்வோருக்கு இந்தியில் குறுஞ்செய்தி வருவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து பயணிகள் நல சங்கம் ரெயில்வே துறைக்கு புகார் தெரிவித்தது. ரெயில் பயணச் சீட்டு முன்பதிவு செய்தால் இந்தியில் குறுஞ்செய்தி வருவதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடர்பான தகவல்களை ஆங்கிலம், உள்ளூர் மொழிகளில் வெளியிட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடக்கோரி ரெயில்வே மந்திரி பியூஷ் கோயலுக்கு திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கடிதம் எழுதி இருந்தார்.

இந்நிலையில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது ஆங்கிலத்திற்கு பதில் இந்தி என முன்னுரிமை கொடுத்ததால் பயனாளிக்கு இந்தியில் டிக்கெட் வரும் என்று ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது.

ஆன் லைன் ரெயில் டிக்கெட் முன்பதிவில் இந்தி திணிப்பு இல்லை எனவும் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது தேர்வு மொழியை சரியாக தேர்வு செய்யுங்கள் என ஐஆர்சிடிசி விளக்கம் அளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here