டிரம்ப் தான் மீண்டும் அமெரிக்க அதிபர் -பிரபல ஜோதிடர் கணிப்பு

டிரம்ப் தான் மீண்டும் அமெரிக்க அதிபர் ஆவார் என பிரபல ஜோதிடர் கணித்துள்ளார்.

அமெரிக்காவில் வரும் நவம்பர் 9ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பாக ஜோ பிடனும் மற்றும் குடியரசு கட்சி சார்பாக டொனால்ட் டிரம்ப் – ம் போட்டியிடுகின்றனர். இதனிடையே இவர்கள் இருவருக்குமிடையே கடும் போட்டியும், பரபரப்பும் நிகழ்ந்து வருகிறது.

மேலும் இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்று மக்களிடையே கருத்து கணிப்புகளும், விவாதங்களும் நடைபெற்றன.
இப்படியிருக்க வருகின்ற தேர்தலில் டிரம்ப் தான் வெற்றி பெறுவார் என்று இந்தியாவின் பீகார் மாநிலத்தை சேர்ந்த பிரபல ஜோதிடர் சங்கர் சரண் திரிபாதி கூறியுள்ளார். அவர் ஜாதகத்தில் அனைத்து கிரகங்களும் சரியாக உள்ளதால் அவர் தான் வெற்றி பெறுவார் என்று உறுதியுடன் கூறியுள்ளார். இதனால் உலக மக்கள் யார் வெற்றி பெறுவார் என்று பெரும் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.