உத்தரப் பிரதேச காவல்துறையினர் தாக்கியதில் தடுமாறி கீழே விழுந்த ராகுல்காந்தி..!

ஹத்ராஷில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட இளம் பெண்ணின் குடும்பத்தாரை சந்திக்க சென்ற ராகுல் காந்தியை உத்தரப்பிரதேச காவல்துறையினர் தாக்கியதில் தடுமாறி ராகுல்காந்தி கீழே விழுந்தார்.

உத்தர பிரதேச மாநிலம், ஹத்ராஷில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட இளம் பெண்ணின் குடும்பத்தாரை சந்திக்க ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் காரில் சென்றபோது தடுத்து நிறுத்தப்பட்டனர். பின்னர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டார். அப்போது போலீசார் தாக்கியதில் தடுமாறி கீழே விழுந்தார்.

மேலும் போலீசார் கீழே தள்ளிவிட்டு லத்தியால் அடிக்க வந்ததாக ராகுல்காந்தி குற்றச்சாட்டியுள்ளார்.

தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தை மீறிச் சென்றதாக ராகுல்காந்தி கைது செய்யப்பட்டார் என போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கைது குறித்து பிரியங்கா காந்தி கூறுகையில், அகம்பாவம் பிடித்த அரசால் எங்களை தடுத்துநிறுத்த முடியாது. போலீசாரின் லத்தி பாதிக்கப்பட்ட பெண்ணை பாதுகாக்க பயன்பட்டிருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here