கோவை வனப்பகுதியில் பலத்த காயங்களுடன் திரியும் யானை

கோவை வனப்பகுதியில் பலத்த காயங்களுடன் சுற்றி வரும் காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ குழுவினர் விரைந்து உள்ளனர்.

கோவை மாட்டம் நெல்லித்துறை வடபகுதியில் முன்கால் மற்றும் பக்கவாட்டில் என பல்வேறு இடங்களில் பலத்த காயங்களுடன் ஒரு காட்டு யானை கடந்த இரண்டு மாதங்களாக சுற்றி வருகிறது.

அந்த யானையை மீட்டு காயத்துக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்த நிலையில் கால்நடை மருத்துவர் சுகுமார் தலைமையில் 5 பேர் கொண்ட மருத்துவ குழுவினர்யானை நடமாட்டம் உள்ள இடங்களில் ஆய்வு மேற்கொண்டது.

அதோடு யானைக்கு தேவையான சிகிச்சைகள் கொடுக்க முடியும் என ஆய்வு செய்து வனப்பகுதிக்கு மருத்துவ குழுவினர் விரைந்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here