உயர் மின் அழுத்தத்தால் பற்றி எரிந்த மின் மீட்டர் பெட்டி!

அம்பத்தூரில் உயர் மின் அழுத்தம் காரணமாக வீடுகளில் இருந்த மின் மீட்டர் பெட்டிகள் தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உயர் மின் அழுத்தம் காரணமாக மின்மாற்றியிலிருந்து வரும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதோடு வீடுகளில் உள்ள மின்னணு பொருள்கள் தீப்பற்றியதால் பெரும் அச்சம் ஏற்பட்டதாகவும், விரைவில் மின்மாற்றியைச் சீரமைத்துத்தர வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதனிடையே, உயர் மின் அழுத்தத்தால் பாதிகப்பட்ட பகுதியை அம்பத்தூர் எம்எல்ஏ அலெக்சாண்டர் ஆய்வுசெய்தார். இது குறித்து அவர் கூறியதாவது, “உயர் மின் அழுத்தம் காரணமாக எரிந்த மீட்டர் பெட்டியை உடனடியாகச் சரிசெய்து தரப்படும். மின் இணைப்புப் பணியில் 50-க்கும் மேற்பட்ட மின் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்” எனக் கூறினார்.