ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் எடப்பாடி பழனிசாமி!!!

தமிழக அரசுக்கு கிடைக்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகையை மத்திய அரசிடம் கேட்டு பெறாமல் அமைதியாக இருக்கும் முதல்வர் பழனிசாமிக்கு எதிராக டுவிட்டரில் ஹேஷ்டாக் ஒன்று டிரெண்ட் ஆனது.

மேலும் ஜிஎஸ்டி தொடர்பாக தொடர்ந்து திமுக.,வை சேர்ந்தவர்கள் அதிமுக., அரசை விமர்சித்து வருகின்றனர். ”ஜிஎஸ்டி., நிலுவையை உடனடியாக மத்திய அரசிடம் கேட்டு பெறுங்கள், அமைதியாக இருக்காதீர்கள்” என்று டுவிட்டரில் இன்று பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இதனால் #குனியாதே EPS_GSTகேள் என்ற பெயரில் ஹேஷ்டாக் டிரெண்ட் ஆனது. சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமானபேர் இந்த ஹேஷ்டாக்கில் மீம்ஸ்களும், கருத்துக்களும் பதிவிட்டு உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here