அதிமுகவை விமர்சித்த ஸ்டாலின்

மத்திய, மாநில அரசுகளின் தவறான பொருளாதார கொள்கைகளால் டாலர் சிட்டியாக இருந்த திருப்பூர் தற்போது டல் சிட்டியாக மாறியுள்ளது என திமுக தலைவர் ஸ்டாலின் அரசை விமர்சித்துள்ளார்.

8 வழி பசுமைச்சாலை திட்டம், வேளாண் மசோதாவிற்கு ஆதரவு என விவசாயிகளுக்கு பெரும் துரோகத்தை இழைத்து வருகிறார். திருப்பூரில் தொழில் வளர்ச்சி பெரிதளவில் இல்லாததற்கு அரசின் தவறான பொருளாதார கொள்கையே காரணம். டாலர் சிட்டியாக இருந்த திருப்பூர் தற்போது டல் சிட்டியாக உள்ளது. மேலும், 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்றவுள்ளதாகவும் தெரிகிறது.

கார்ப்பரேட் க்கு நாட்டை விற்பவர்கள், நாட்டுப்பற்றை விளக்க வேண்டிய அவசியமில்லை. திமுக ஆட்சி அமைந்ததும் பல்வேறு தொழில் துறையை சேர்ந்த வல்லுநர் குழு உருவாக்கப்பட்டு, அவர்களின் ஆலோசனையின் பேரில் தொழில் சிறக்க ஆட்சி செய்யப்படும்” என்று உறுதியளித்தார்.