Devotees prohibited to Chathuragiri hill : சதுரகிரி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை

விருதுநகர்: Devotees prohibited from going to Chathuragiri hill temple. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிரசித்திபெற்ற சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில் அமைந்துள்ளது.

இந்த மலைக் கோவிலுக்கு ஒவ்வொரு பிரதோஷத்திற்கு தொடர்ந்து 4 நாட்கள், அதாவது ஒரு மாதத்தில் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

மலைப் பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக கடந்த இரண்டு பிரதோஷங்கள், அமாவாசை மற்றும் பௌர்ணமி தரிசனத்திற்காக, பக்தர்கள் மலைக் கோவிலுக்குச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து கடந்த 21ம் தேதி கார்த்திகை மாத தேய்பிறை பிரதோஷம் நாளில், சதுரகிரி மலைக்கோவிலுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அன்று முதல், வரும் 24ம் தேதி வரையில், சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதனைத்தொடர்ந்து தற்போது, கோயிலுக்கு செல்லம் ஓடைகளில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.