நிவர் புயல் காரணமாக ஏழு மாவட்டங்களுக்கு பேருந்து போக்குவரத்து சேவை நிறுத்தம்

நிவர் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து, ஏழு மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி முதல் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்படுவதாக தமிழக அறிவித்துள்ளது. புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து சேவை நிறுத்தம். வரும் நவம்பர் 24, 25-ம் தேதிகளில் புயல் காற்று வீச இருப்பதால் மக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டுமென்று முதல்வர் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் சம்பந்தப்பட்ட கண்காணிப்பு அலுவலர்களும் முகாமிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும்.