தென் மாவட்டங்களில் அடுத்த 3 நாள் கனமழைக்கு வாய்ப்பு

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று புயலாக மாறும் என்றும், இதனால், அடுத்த 3 நாட்களுக்கு தென் தமிழகத்தில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், திருவாரூர், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் டிசம்பர் 3-ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.