Fazil Murder Case : ஃபாசில் கொலை வழக்கு: 6 பேர் கைது

மங்களூரு : Fazil Murder Case: Police arrest six accused : கடலோர கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சூரத்கல்லில் கடந்த வாரம் நடந்த பாசில் கொலை வழக்கை முடிப்பதில் மங்களூரு போலீசார் வெற்றி பெற்றுள்ளனர். ஆகஸ்ட் 2 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ஆறு குற்றவாளிகளை போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் சுஹாஸ் (29), மோகன் (26), கிரிதர் (23), அபிஷேக் (23), தீட்சித் (21), ஸ்ரீநிவாஸ் (26) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஜூலை 28ம் தேதி இரவு சூரத்கல்லில் ஃபாசில் வெட்டிக் கொல்லப்பட்டார். இது குறித்து வழக்கு பதிந்த மங்களூரு போலீஸார் 50க்கும் மேற்பட்டோரை கைது செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் தற்போது 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இது குறித்து மாநகர காவல் ஆணையர் சசிகுமார் (Police Commissioner Sasikumar) கூறியது: ஜூலை 28-ம் தேதி சூரத்கல்லில் மங்கல்பேட்டையைச் சேர்ந்த ஃபாசில் படுகொலை செய்யப்பட்டார். இவர் ஹெச்பிசிஎல் புல்லட் டேங்கரில் பகுதி நேர துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று காரில் வந்த மர்மநபர்கள் ஃபாசிலை சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றனர்.

பஜேபேயில் வாடகை வீட்டில் வசித்து வந்த சுஹாஸ் ஷெட்டி, தனது நண்பர் அபிஷேக்குடன் சேர்ந்து ஒருவரைக் கொல்ல வேண்டும் என்று கூறினார். ஆனால் யாரைக் கொல்ல வேண்டும் என்பதை அவர்களால் தீர்மானிக்க முடியவில்லை. அதே காரணத்திற்காக, ஜூலை 27 ஆம் தேதிய‌ன்று சுஹாஸ், கிரிதர் மற்றும் மோகனுடன் மீண்டும் உரையாடினார். சுஹாஸ், அபிஷேக் மற்றும் கிரிதர் (Suhas, Abhishek and Krithar) ஆகியோர் கார் மற்றும் கொலைக்கு தேவைப்படும் ஆயுதம் குறித்து ஹோட்டலில் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மோகன் தனது இரண்டு நண்பர்களை இந்த திட்டத்தில் சேர அழைத்தார். “ஜூலை 27 ஆம் தேதிய‌ன்று, அவர்கள் தங்களது திட்டம் வெற்றியடைந்தால், மூன்று நாட்களில் ரூ. 15,000 தருவதாக கூறி அஜீத் க்ரஸ்தா என்பவரிடமிருந்து காரைப் பெற்றுச் சென்றனர்.கொலைக்கு சதித்திட்டம் தீட்டி காரை வாடகைக்கு எடுத்த சுஹாஸ், அன்று இரவு காவூரில் உள்ள நண்பர் வீட்டில் தங்கினார். மறுநாள் ஆயுதங்களை காரில் ஏற்றிக் கொண்டு பாண்ட்வா அருகே உள்ள கரிஞ்சேஷ்வர் கோவிலுக்கு சென்றார்.

குற்றம் சாட்டப்பட்ட சுஹாஸ் ஷெட்டி மற்றும் பிற குற்றவாளிகள் மற்றொரு வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். மேலும், குற்றஞ்சாட்டப்பட்ட 6 பேரும் நீதிமன்றத்திற்குப் பக்கத்தில் உள்ள பள்ளியில் அமர்ந்து ஃபாசில் கொலைக்கான திட்டத்தை தீட்டினர். நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் சூரத்கல் அருகே ஒரு பாரில் மதிய உணவு சாப்பிட்டனர். இந்த நேரத்தில் ஃபாசில் பற்றிய தகவல் கிடைத்தது. பின்னர் மங்கல்பேட்டைக்கு ஃபாசில் வருவது குறித்து தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சூரத்கல்லில் உள்ள கேன்டீனுக்குச் சென்று அங்கு இது தொடர்பாக விவாதித்தனர். கிண்ணிகோலியில் உள்ள ஒரு பாரில் மதிய உணவு சாப்பிட்டனர். அதே நேரத்தில் கைது செய்யப்பட்டவர்களில் இருவர் சூரத்கலில் ஃபாசிலையும் அவரது நடமாட்டத்தையும் கண்காணித்தனர். சுஹாஸ், மோகன் மற்றும் அபிஷேக் ஆகியோர் ஃபாசில் மீது தாக்குதல் நடத்தினர் (Suhas, Mohan and Abhishek attack Fazil). கிரிதர் காரை ஓட்டி வந்தார், தீட்சித் காரில் அமர்ந்திருந்தார், கொலையின் போது ஸ்ரீனிவாஸ், பொதுமக்களிடமிருந்து அவர்களை பாதுகாப்பதற்காக தயார் நிலையில் இருந்தார்.

ஃபாசிலைத் தாக்கிய பின்னர் குற்றவாளிகள் 6 பேரும் பலிமாறு நோக்கி தப்பிச் சென்றுள்ளனர். பின்னர் கொலைக்கு பயன்படுத்திய காரை அங்கேயே விட்டுவிட்டு வேறு காரில் தப்பிச் சென்றுள்ளனர். இந்த தகவல் அனைத்தையும் சேகரித்த போலீஸார், செவ்வாய்க்கிழமை காலை உதயவாரத்தில் 6 பேரைக் கைது செய்தன‌ர். கைது செய்யப்பட்ட 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாள் போலீஸ் காவலில் (14 days in police custody) வைக்கப்பட்டனர். சுஹாஸ் மீது 4, மோகன் மீது 2, கிரிதர் மீது 2, அபிஷேக் மீது 2, ஸ்ரீனிவாஸ் மீது 4, தீட்சித் மீது 3 வழக்குகள் உள்ளன. சுஹாஸ், அபிஷேக், மோகன் ஆகியோர் ரௌடி பட்டியலில் இடம்பெற்றுள்ளனர் என்றார்.