27 people sentenced to life imprisonment: கொலை வழக்கில் 27 பேருக்கு ஆயுள் தண்டனை: சிவகங்கை நீதிமன்றம் அதிரடி

சிவகங்கை: 27 people sentenced to life imprisonment: 3 பேர் கொலை வழக்கில் 27 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே கச்சநத்தம் கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகர், கடந்த 2018ம் ஆண்டு மே 28ல் இவர்கள் மூவரும் கொலை செய்யப்பட்டனர். கோவில் திருவிழா நடைபெற்ற முன் விரோதத்தில் வேறு ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் இவர்களை வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். இதில் 5 பேர் படுகாயமடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களில் தனசேகரன் சுமார் ஒன்றரை ஆண்டுக்குப்பின் உயிரிழந்தார்.

இந்த வழக்கில் ஆவரங்காடு கிராமத்தை சேர்ந்த சுமன், அருண்குமார், சந்திரக்குமார், அக்னிராஜ், ராஜேஷ் உள்ளிட்ட 33 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். 33 பேரில் இருவர் விசாரையின்போது உயிரிழந்தனர். 3 பேர் சிறுவர்கள், ஒருவர் தலைமைமறைவு.

இதனையடுத்து மீதமுள்ள 27 பேர் மீது சிவகங்கை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கடந்த 1ம் தேதி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 27 பேரும் குற்றவாளிகள் குற்றவாளிகள் எனவும், குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், கச்சநத்தம் 3 பேர் படுகொலை வழக்கில் குற்றவாளிகள் 27 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி முத்துக்குமரன் அதிரடி தீர்ப்பளித்தார். இதையடுத்து, குற்றவாளிகள் 27 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

குற்றச்செய்திகள்:
பைக் சாவிக்காக கை துண்டிப்பு.. மகன் உயிரிழப்பு
மத்தியப் பிரதேசத்தின் தாமோ பகுதியை சேர்ந்தவர்கள் மோதி படேல் ( 51) அவரது மூத்த மகன் ராம் கிசான் (24), இளைய மகன் சந்தோஷ் படேல். இவர்கள் இருவரும் வெளியில் செல்வதற்காக அவரது இளைய மகன் சந்தோஷ் படேலிடம் பைக் சாவியைக் கேட்டபோது, சாவியை தர மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரத்தில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில் மோதி, ராம் கிசான் இருவரும் சந்தோஷை தாக்கியுள்ளனர். மோதி சந்தோஷின் இடது கையை கோடரியால் வெட்டியதால் கை துண்டிக்கப்பட்டது.

மகனின் துண்டிக்கப்பட்ட கை மற்றும் கோடாரியுடன் காவல் நிலையத்திற்கு சென்று நடந்ததை தெரிவித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சந்தோஷை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ரத்தக்கசிவு காரணமாக அங்கிருந்து மேல் சிகிச்சைக்கான ஜபால்பூருக்கு கொண்டு செல்லும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

இதனையடுத்து ஜபால்பூருக்கு கொண்டு செல்லும் வழியில் ரத்தம் அதிகமாக வெளியேறியதால் சந்தோஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து அவரது தந்தை மற்றும் சகோதரர் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.