சீனத் தடுப்பூசியை முதல் நாடாக ஏற்றுக்கொண்ட ஐக்கிய அரபு அமீரகம்

ரிசோதனை கட்டத்தில் இருக்கும் சீனாவின் கொரோனா தடுப்பூசியை மதிப்பீடு செய்த முதல் நாடாகி இருக்கிறது ஐக்கிய அரபு அமீரகம். சீனாவின் கொரோனா தடுப்பூசி 86 சதவீதம் செயல்திறன் கொண்டதாக இருக்கிறது என ஐக்கிய அரபு அமீரகம் கூறுகிறது.

சீனாவின் கொரோனா தடுப்பு மருந்து, ஐக்கிய அரபு அமீரகத்தில் மூன்றாம் கட்ட பரிசோதனையில் இருக்கிறது.

சினோஃபார்ம் எனப்படும் சீனாவின் தேசிய மருந்துக் குழு நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்து, எந்தவித ஆபத்தையும் ஏற்படுத்தவில்லை என பரிசோதனையில் தெரிவதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் கூறிப்பிட்டார்.