காங்கிரஸ் ஆலோசனைக் குழு கூட்டம்

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் அக்கட்சியின் ஆலோசனைக் குழு கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி காணொலி வாயிலாக கலந்துகொள்கிறார்.முன்னதாக காங்கிரஸ் கட்சி தனது செயல்பாடுகளை சீர்தூக்கி பார்க்க வேண்டும் என்றும் கட்சிக்கு நிரந்த தலைவர் நியமிக்கப்பட வேண்டும் என்றும் ஆகஸ்ட் மாதம் கபில் சிபல் உள்பட 23 மூத்தத் தலைவர்கள் கடிதம் எழுதினார்கள்.

இது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இந்நிலையில், மூத்தத் தலைவர் அஹமது பட்டேல், கே.சி. வேணுகோபால், ஏ.கே. அந்தோணி, அம்பிகா சோனி, முகுல் வாஸ்னிக், ரன்தீப் சுர்ஜேவாலா ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட காங்கிரஸ் சிறப்பு குழு அமைக்கப்பட்டது.