அக்னிபத் திட்டத்தை எதிர்த்து டெல்லியில் காங்கிரஸ் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்

Agneepath Protest
அக்னிபத் திட்டத்தை எதிர்த்து டெல்லியில் காங்கிரஸ் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்

Agneepath Protest: ராணுவத்துக்கு ஆள் சேர்க்க ‘அக்னிபத்’ என்ற புதிய திட்டத்தை கடந்த 14-ந் தேதி மத்திய அரசு அறிவித்தது. 4 ஆண்டுகளுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.

இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்து வருகின்ற.

இந்த நிலையில் டெல்லியில் அக்னிபத் திட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது .காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது .

இதையும் படிங்க: தங்க கடத்தல் வழக்கு: ஜூன் 22ம் தேதி ஸ்வப்னா சுரேஷ் ஆஜராக வேண்டும் – சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை