முதலமைச்சர் தலைமையில் அதிமுக 49ஆவது ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம்!!!

அதிமுகவின் 49ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தனது சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் அக்கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.

அதிமுகவில் 49ஆவது ஆண்டு தொடக்க விழா இன்று (அக்.17) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, சென்னையில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் இன்று காலை கொடியேற்றி கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது .

இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது தாயாரின் மறைவையொட்டி தன் சொந்தக் கிராமத்தில் தங்கியுள்ளதை அடுத்து, அவரது சொந்த கிராமத்தில் அவரது வீட்டின் எதிரில் உள்ள திடலில் இன்று காலை கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட அஇஅதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.