Shivin in Bharathi Kannamma: விஜய் டிவி சீரியலில் பிக்பாஸ் ஷிவின்

சென்னை: It has been reported that Bigg Boss celebrity Shivin is currently acting in a Vijay TV serial. பிக்பாஸ் பிரபலம் ஷிவின் தற்போது விஜய் டிவி சீரியலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 6 சமீபத்தில் நிறைவடைந்தது. இதில் அசீம், விக்ரமன், ஷிவின் ஆகிய 3 பேர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர். இறுதிப் போட்டியில் ஷிவின் அல்லது விக்ரமன் வெற்றி பெறுவார்கள் மக்கள் எதிர்ப்பார்த்து காத்திருந்தனர். ஆனால், இந்த சீசனில் பிக்பாஸ் கோப்பையை அசீம் வென்றார். விக்ரமன் இரண்டாம் இடத்தையும் , ஷிவின் 3ம் இடத்தையும் பிடித்தனர்.

அசீமின் வெற்றி மக்களிடையே அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியது மேலும் பலர் அப்போ அராஜகம் செய்தால் வெற்றி பெற்று விடலாமா என்று விஜய் டிவியையும், பிக் பாஸ் தொகுப்பாளர் கமலஹாசனையும் பல்வேறு தரப்பினர் விமர்சித்தும் வருகின்றனர்.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசனில் மூன்றாம் இடம் பிடித்த ஷிவின் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருநங்கை ஷிவின் ஒரு மாடல் ஆவார். குடும்பத்தில் ஒரே மகனான ஷிவின் திருநங்கையாக மாறினார். ஆனால் இவருடைய விருப்பத்திற்கு அவரது வீட்டில் ஆதரவு தரவில்லை. இதனால் இவர் வேலை தேடி சிங்கப்பூர் சென்றார். சில ஆண்டுகள் இவர் அங்கேயே தங்கியிருந்தார்.

பின்னர் இவர் மீண்டும் தாயகம் திரும்பினார். அப்போதும் அவர்களுடைய வீட்டில் ஏற்றுக்கொள்ளவில்லை. அதோடு இவர் தன்னுடைய அம்மாவை கூட சந்திக்கவில்லை. மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதன் மூலம் இதுவரை தன்னிடம் பேசாத அம்மா தன்னுடன் பேசுவார் என்று எதிர்பார்த்து இந்த நிகழ்ச்சியில் சிவின் கணேசன் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்திலிருந்து ஷிவின் கணேசன் மிகச் சிறப்பாக விளையாடினார். இவர் பல அவமானங்கள், கிண்டல்களை சந்தித்தாலும் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் அதனை எதிர்கொண்டு தைரியத்துடன் விளையாடி தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதன் முறையாக ஒரு திருநங்கை நிகழ்ச்சியின் இறுதி போட்டி வரையில் சென்று வந்துள்ளார் என்ற பெருமையை ஷிவின் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் ஷிவின் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியலான பாரதி கண்ணம்மாவில் நடிக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. மேலும் டிஆர்பி ரேட்டிங்கில் உச்சத்தில் இருக்கும் தொடர்களில் ஒன்றாகவும் பாரதி கண்ணம்மா சீரியல் திகழ்ந்து வருகிறது.