‘சாணிக் காயிதம்’… போஸ்டரை வெளியிட்டார் தனுஷ்

‘சாணிக் காயிதம்’ திரைப்படத்தின் இரண்டாவது போஸ்டரை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.

தனது வித்தியாசமான படைப்புகளால் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் செல்வராகவன். இவருக்கென ரசிகர்களும் ஏராளம். இதுவரை திரைக்குப் பின்னால் இருந்த செல்வராகவன் ‘சாணிக் காயிதம்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார்.

இத்திரைப்படத்தில் அவருடன் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கவுள்ள இத்திரைப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்ற நிலையில் தற்போது இரண்டாவது போஸ்டரை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.