கடல்போல் சூழ்ந்த மழை வெள்ளம்

கடலூர், சிதம்பரத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. கடலூர் மாவட்டம் பரதம்பட்டில் தொடர் மழை காரணமாக, சுமார் 50,000 வீடுகளில், வெள்ள நீர் புகுந்ததால், மக்கள் அவதியடைந்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரில் பெய்த தொடர் மழை காரணமாக நான்கு நாட்களாக வெளியில் வரமுடியாமல் தவித்த குடும்பத்தினரை காவல்துறை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர்.