உ.பி.யில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்!!!

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அந்த பெண்ணின் மரணத்திற்கு நீதி கேட்டு அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தொடர் போராட்டம் காரணமாக ஹத்ராஸ் மாவட்டத்தில் பதற்றம் நிலவுகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க அரசியல் தலைவர்களுக்கு அனுமதி அளிக்காமல் இருந்தனர். தடையை மீறி வரும் தலைவர்களிடம் போலீசார் கடுமையாக நடந்துகொண்டனர். பின்னர் தொடர் போராட்டங்களுக்கு பிறகு தலைவர்கள் சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தக் கோரி பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், ஹத்ராஸ் சம்பவத்தை தொடர்ந்து உ.பி.யில் சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, பாலியல் வன்கொடுமை தொடர்பான புகார் கொடுப்பவர்களையே அதிகாரிகள் தொடர்ச்சியாக துன்புறுத்துகிறார்கள் என கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here