சூரப்பா மீது இடைநீக்க நடவடிக்கை நடைபெறும் – அமைச்சர் அன்பழகன்

முறைகேடு புகார்களுக்கு ஆளாகியிருக்கும் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா மீதான இடைநீக்க நடவடிக்கை என்பது விதிப்படியே முடிவெடுக்க முடியும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

அண்ணாப் பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது 280 கோடி ரூபாய் முறைகேடு புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதியரசர் கலையரசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாரத்தில் கலையரசன் தலைமையிலான குழு விசாரணையை துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை இடைநீக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. இதுகுறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனிடம் விளக்கம் கேட்டபோது விதிகளுக்கு உட்பட்டே துணைவேந்தர் மீதான இடைநீக்க நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் என்று தெரிவித்தார்.