சிபிராஜின் ‘கபடதாரி’ டீசரை வெளியிட்ட ஏ.ஆர். ரஹ்மான்

நடிகர்கள் சத்யராஜ், நாசர், ஜெயப்பிரகாஷ், ஜே.எஸ்.கே உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ‘விஸ்வரூபம்’ படப்புகழ் பூஜாகுமார் கபடதாரி படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். ‘சத்யா’ திரைப்படத்தின் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இத்திரைப்படத்தையும் இயக்குகிறார். சைமன் கிங் இசையமைக்கிறார்.

கரோனா பாதிப்பால் முழுமையாக முடிவடையாமல் இருந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றது. சிபிராஜின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் போஸ்டரை சூர்யா வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், தற்போது படத்தின் டீசரை ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட்டுள்ளார்.