நாளை தமிழகம் வரும் அமித் ஷா

நாளை சென்னை வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சட்டப் பேரவைத் தேர்தல் தொடர்பாக பாஜகவினருடன் ஆலோசனை நடத்துகிறார்.அத்துடன், கூட்டணி தொடர்பாக அதிமுக தலைமையுடன் அமித் ஷா பேசுவார் என்றும் கூறப்படுகிறது.

நாளை இரவு சென்னையில் தங்கும் அவர், ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.