2021-22 ல் கிட்டத்தட்ட 80 ஆயிரம் போலி 500 ரூபாய் நோட்டுக்கள் கண்டுபிடிப்பு- ரிசர்வ் வங்கி

rbi-report
2021-22 ல் கிட்டத்தட்ட 80 ஆயிரம் போலி 500 ரூபாய் நோட்டுக்கள் கண்டுபிடிப்பு

RBI Report: ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கையின்படி, 2021-22 நிதியாண்டில் வங்கிகளால் கண்டறியப்பட்ட ரூ. 500 மதிப்புடைய போலி ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்து 79,669 துண்டுகளாக அதிகரித்துள்ளது என்று ரிசர்வ் வங்கியின் ஆண்டு அறிக்கை தெரிவிக்கிறது.

அதே போல் ரூ.2,000 மதிப்புள்ள கள்ள நோட்டுகள் மொத்தம் 13,604 நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய நிதியாண்டை விட 54.6 சதவீதம் அதிகமாகும். ரூ.50 மற்றும் ரூ.100 மதிப்பில் கண்டறியப்பட்ட போலி நோட்டுகள் முறையே 28.7 சதவீதம் மற்றும் 16.7 சதவீதமாக குறைந்துள்ளது.

2021-22 ஆம் ஆண்டில், வங்கித் துறையில் கண்டறியப்பட்ட மொத்த கள்ளநோட்டுக்களில், 6.9 சதவிகிதம் ரிசர்வ் வங்கியிலும், 93.1 சதவிகிதம் மற்ற வங்கிகளிலும் கண்டறியப்பட்டுள்ளன என்று அறிக்கை கூறுகிறது.

Rs 500 fake currency notes surge 102% in FY22, says RBI annual report

இதையும் படிங்க: Maggi Case: மூன்று வேளையும் மேகி மட்டுமே சமைக்கிறார்- மனைவியை விவாகரத்துசெய்த கணவர்