நடிகை நிவேதா தாமஸுக்கு கொரோனா தொற்று !

நாடு முழுவதும் காரோண தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், திரைபிரபலங்கள் உள்பட அனைத்து தரப்பினரும் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

நிவேதா தாமஸ் ஜில்லா,பாபநாசம் , தர்பார் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், நிவேதா தாமஸுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனை தனது ட்விட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார்.

எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து மருத்துவ விதிமுறைகளையும் பின்பற்றி என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். விரைவில் முழுமையாகக் குணமடைவேன் என எதிர்பார்க்கிறேன்.அன்பும் ஆதரவும் அளித்த அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.