நடிகை சித்ரா மரணம்: உறவினர்கள், நண்பர்களை அழைத்து விசாரிக்க போலீஸ் முடிவு

சின்னத்திரை நடிகை சித்ரா உயிரிழந்த வழக்கில் அவரது கணவர் ஹேமந்த் ரவி மற்றும் உறவினர்களுக்கு சம்மன் அளித்து விசாரிக்க காவல்துறை முடிவு செய்துள்ளது.

சித்ராவினுடைய நண்பர்கள், உறவினர்களையும் அழைத்து விசாரித்து, விசாரணையை காவல்துறை தீவிரப்படுத்த உள்ளது.• சின்னத்திரை நடிகை சித்ரா உயிரிழந்தது தற்கொலையா அல்லது கொலையா என, காவல்துறையினருக்கு ஏற்பட்டுள்ள பல்வேறு சந்தேகத்தை அடுத்து இத்தகைய விசரணை தீவிரப்படுத்தி பல்வேறு கோணங்களில் விசாரிக்க திட்டமிட்டுள்ளது.

இன்று காலை 10 மணிக்கு சித்ராவின் உடல் பிரேத பரிசோதனை செய்யபடுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.