கமல் கணிப்பு நிஜமாகுமா?

தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலில் பல கூட்டணிகள் உருவாகலாம்; பல கூட்டணிகள் உடையலாம் என மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலில் பல கூட்டணிகள் உருவாகலாம்; பல கூட்டணிகள் உடையலாம். அனுமதி கிடைத்தவுடன் தேர்தல் பரப்புரையை தொடங்குவேன். ஊடகத்தின் தேவை எங்களுக்கும் இருக்கிறது. எங்களின் தேவை உங்களுக்கும் இருக்கிறது. எல்லோரும் கொஞ்சம் கவனமாக இருப்போம். இதை தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொள்கிறேன் எனவும் கமல் தெரிவித்துள்ளார்.