அஜித் ஒரு ஜென்டில்மேன்-நடிகை லட்சுமிமேனன் புகழாரம்

அஜித் ஒரு ஜென்டில்மேன் என நடிகை லட்சுமிமேனன் புகழாரம் சூட்டியுள்ளார்.

நடிகை லட்சுமிமேனன் சினிமாவுக்கு வந்து நடிகை லட்சுமிமேனன் சினிமாவுக்கு வந்து எட்டு ஆண்டுகள் ஆகின்றன. வேதாளம் படத்தில் அஜீத் குமாருடன் சேர்ந்து நடித்தது பற்றி நினைவு கூர்ந்துள்ள அவர், மிகவும் பிடித்த படம் அதுவென்று உற்சாகமாக தெரிவித்துள்ளார்.

அஜித்துடன் நடிப்பது என் கனவு, என் ஹீரோ அஜீத்துடன் நடிப்பதற்கு மிகப்பெரும் வாய்ப்பளித்த இயக்குனர் சிவாவுக்கு நன்றி தெரிவிக்கிறேன். அஜித் ஒரு ஜென்டில்மேன் வேதாளம் எனக்கு மிகவும் பிடித்த படம் என்று பதிவிட்டுள்ளார்.

வேதாளம் படத்தில் லட்சுமிமேனன் அஜித்துக்கு சகோதரியாக நடித்திருந்தார் சிறுத்தை சிவா இயக்கிய ஆக்சன் படமான வேதாளம் ரசிகர்களிடையே பெரும் வெற்றி பெற்றது தனது 16 வயதில் தமிழ் சினிமாவில் சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் அறிமுகமான லட்சுமிமேனன் கிராமத்துப் பெண்ணாக நடித்து ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்டார்.

லட்சுமிமேனன் கடைசியாக விஜயசேதுபதியுடன் ரெக்க படத்தில் நடித்திருந்த இயக்குனர் முத்தையாவின் அடுத்த படத்தில் கௌதம் கார்த்திக் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here