பள்ளிகள் திறப்பு எப்போது? முதல்வர் அதிரடி அறிவிப்பு

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மருத்துவ குழுவினருடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த கூட்டத்தின் போது திரையரங்குகள் மற்றும் பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஊரடங்கில் தளர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இதில் திரையரங்குகள், பள்ளி கல்லூரிகள் திறப்பது குறித்து இதுவரையில் எந்தத் தகவலும் இல்லை.

இதுதொடர்பாக முதல்வர் தெரிவிக்கையில், தமிழ்நாட்டில் பள்ளிகளை திறப்பது குறித்தும், திரையரங்குகளை திறப்பது குறித்தும் அரசு ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

புதியக் கல்விக் கொள்கையின் காரணமாக தாமதம் ஏற்படுகிறது என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.