25,000 ரூபாய்க்கு மேல் லக்ஷ்மி விலாஸ் வங்கியில் பணம் எடுக்க கட்டுப்பாடு..!

வாராக் கடன் பிரச்சினை மட்டுமல்லாமல் லட்சுமி விலாஸ் வங்கியின் டெபாசிட் தொகையும் குறையத் தொடங்கியது.

லட்சுமி விலாஸ் வங்கியில் ஒரு மாதத்துக்கு 25,000 ரூபாய்க்கு மேல் எடுக்கக்கூடாது என்று ஆர்.பி.ஐ கட்டுப்பாடு விதித்துள்ளது.லட்சுமி விலாஸ் வங்கியில் நஷ்டம் அதிகரித்து வருவதால் மோசமான நிலைக்கு தள்ளப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் மத்திய அரசு வங்கியின் நடவடிக்கைகளுக்கு தற்காலிக தடைவிதித்துள்ளது. லட்சுமி விலாஸ் வங்கியின் வாராக் கடன்கள் 2020 மார்ச் மாத நிலவரப்படி 25.39 சதவிகிதமாக அதிகரித்தது.