பாஜகவில் இணைந்தாலும் பெரியார் ஆதரவாளராகவே நீடிக்கிறேன் -குஷ்பூ

பாஜகவில் இணைந்தாலும் பெரியார் ஆதரவாளராகவே நான் நீடிக்கிறேன் என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காகவே நான் பாஜகவில் இணைந்துள்ளேன்

தந்தை பெரியார் காங்கிரஸ் கட்சியை கூட எதிர்த்துள்ளார், அதற்காக அந்த கட்சியில் யாரும் சேராமலா உள்ளார்கள்?

நிதானமாக யோசித்த பிறகே காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளேன்

தமிழகத்தின் ஒவ்வொரு தெருவிலும் தாமரை மலர பாடுபடுவது எனும் உறுதி மொழியுடன் பாஜகவில் சேர்ந்துள்ளேன்

நான் பாஜகவில் இணைய உள்ளதாக ரூ.2க்கு ட்வீட் போட்டது காங்கிரஸ் கட்சியினர் தான் எனத் தெரிவித்துள்ளார்.